இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சமீபத்தில் நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் பரத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். அது மட்டுமல்ல, செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் என மற்ற 22 பதவிகளையும் அவர் தலைமையிலான சின்னத்திரை வெற்றி அணியே கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி ''எங்கள் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை தந்து இருக்கிறார்கள் சங்க உறுப்பினர்கள். அவர்களுக்கு நன்றி. இன்னும் சில நாட்களில் பதவியேற்பு விழா நடக்க உள்ளது. சங்கத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 100க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்க செய்வதுதான் எங்களின் முதல் வேலை. இனி சங்கத்தில் உறுப்பினர் அல்லாதவர்கள் டிவி சீரியல்களில் நடிப்பது கஷ்டம். அதற்கான திட்டங்களை கொண்டு வருவோம்.
நான் ஏற்கனவே செயற்குழு, நிர்வாக பதவிகளில் இருந்து இருக்கிறேன். மற்ற உறுப்பினர்கள் என்னை எளிதில் அணுகி பேசலாம். அந்த நம்பிக்கையில்தான் இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்து இருக்கிறார்கள். படிப்படியாக உறுப்பினர்கள் பிரச்னைகளை தீர்த்து, அவர்களுக்கு நல்லது செய்வோம். நான் சில சீரியல்களில் நடித்து வருகிறேன். அதையும் பார்த்துக் கொண்டு, சங்க பணிகளை செய்வேன். உயிரோசை என்ற படத்தில் ஹீரோவாக நடித்தேன். சில படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து இருக்கிறேன். இப்ப சீரியலில் கவனம் செலுத்துகிறேன். வருங்காலங்களில் டப்பிங் சீரியல் விவகாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்'' என்றார்.