அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
'விக்ரம்' படத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக சில புதிய படங்களில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த ஆண்டில் அவர் நடித்து மூன்று படங்கள் வெளியாக உள்ளது. முதலில் தெலுங்கில் நடித்துள்ள 'கல்கி 2898 ஏடி' படம் ஜுன் 27ம் தேதி வெளியாக உள்ளது. அடுத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படம் வரப் போகிறது. மூன்றாவதாக மணிரத்னம் இயக்கி வரும் 'தக் லைப்' படம் வெளிவர உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே ஆண்டில் கமல்ஹாசன் நடித்துள்ள மூன்று படங்கள் இந்த ஆண்டு வரப்போது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. 'கல்கி 2898 ஏடி' படத்தில் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் தான் நடித்துள்ளார். இருந்தாலும் அப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. 'இந்தியன் 2', தக் லைப்' ஆகிய படங்களும் பான் இந்தியா படங்களாகவே வெளிவரும்.
'தக் லைப்' படம் முடிந்த பின் ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்க உள்ள தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார் கமல்ஹாசன்.