ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தெலுங்குத் திரையுலகத்தில் தனித்த நடிகராக விளங்கியவர் மறைந்த என்டிஆர். தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஒன்றுபட்ட ஆந்திர முதல்வராகவும் இருந்து தெலுங்கு மக்களுக்காக பல நல்ல விஷயங்களைச் செய்துள்ளார். சென்னையில் செயல்பட்டு வந்த தெலுங்கு திரையுலகத்தை ஐதராபாத்திற்கு மாற்றியவர் என்டிஆர்.
பத்மவிபூஷன் விருது பெற்று டில்லியிலிருந்து ஐதராபாத் திரும்பிய நடிகர் சிரஞ்சீவி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்டிஆர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது கிடைத்தால் நான் மிகவும் மகிழ்வேன். அரசு ஆதரவுடன் அது விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்,” என்றார்.
மேலும், ஆந்திர சட்டசபைத் தேர்தலில் பித்தாபுரம் தொகுதியில் போட்டியிடும் தனது தம்பி பவன் கல்யாணுக்காக பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்றும் கூறினார். “எனது ஆதரவு எப்போதும் பவன் கல்யாணுக்கு உண்டு. எங்களது குடும்பம் அவரது அரசியல் வாழ்க்கையை எப்போதும் வாழ்த்தும்,” என்றும் தெரிவித்தார்.
தென்னிந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை மறைந்த நடிகரும், முதல்வருமான எம்ஜிஆருக்கு மட்டுமே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.




