பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பாகங்களான வெளியான பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வரலாற்றுப் படங்கள் மீதான ரசிகர்களின் ஆவலை தூண்டி, இன்று பல வரலாற்று படங்கள் உருவாவதற்கு அடித்தளமிட்ட படம் பாகுபலி என்றால் அதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த நிலையில் பாகுபலி படம் அப்படியே 'பாகுபலி : கிரவுண்ட் ஆப் தி பிளட்' என்கிற பெயரில் அனிமேஷன் சீரிஸ் ஆக வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது.
இந்த அனிமேஷன் சீரிஸில் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்தை பார்க்கும்போது பலரும் அது நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி சாயலிலேயே இருப்பதாக கருதினார்கள். இதுகுறித்து இயக்குனர் ராஜமவுலியிடமே கேட்கப்பட்டது. அவரும் கூட பாகுபலி தோனி சாயலில் தான் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொண்டதுடன், ஒருவேளை இதை உருவாக்கியவர்கள் தோனியின் ரசிகர்களாக இருந்திருப்பார்கள் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.