ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கன்னடத்தில் வெளியான கேஜிஎப் 2 படத்தில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சமீபகாலமாக தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த வருடம் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்த சஞ்சய் தத் தற்போது தெலுங்கில் டபுள் ஐ-ஸ்மார்ட் படத்திலும், கன்னடத்தில் கேடி தி டெவில் என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மறைந்த பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரும், நடிகருமான துருவா சார்ஜா வீட்டு விசேஷத்தில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் சஞ்சய் தத். சில மாதங்களுக்கு முன்பு துருவா சார்ஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது அதற்கு பெயர் சூட்டும் விழாவை பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் நடத்தினார் துருவா சார்ஜா.
இந்த நிகழ்வில் தான் சஞ்சய் கலந்து கொண்டார். தற்போது கன்னடத்தில் சஞ்சய் தத் நடித்துள்ள கேடி டெவில் படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர் துருவா சார்ஜா தான். அந்த நட்பின் அடிப்படையில் தான் சஞ்சய் தத் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். மேலும் துருவா சார்ஜாவின் மாமாவான நடிகர் அர்ஜுநும் இந்த நிகழ்வில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் என்பதும் லியோ படத்திற்கு பிறகு இந்த நிகழ்வின் மூலம் சஞ்சய் தத்தும் அர்ஜுனும் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.