'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
'மதுபானக்கடை, வட்டம்' ஆகிய படங்களை இயக்கியவர் கமலகண்ணன். தற்போது காளி வெங்கட் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‛குரங்கு பெடல்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இது ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை தழுவி உருவாகி உள்ளது. சந்தோஷ் வேலுமுருகன், வி.ஆர்.ராகவன், எம்.ஞானசேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
சைக்கிள் ஓட்டத் துடிக்கும் மகனுக்கும் அவனது தந்தைக்குமான பிணைப்பைச் சொல்லும் படம் இது. 80 மற்றும் 90களில் அரைபெடல் போட்டு சிறுவர்கள் சைக்கிள் கற்றுக் கொள்வது வழக்கம். இது அதைச் சுற்றிப் பேசும் படம் இது. இதனை சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் வரும் மே 3ல் படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர்.