ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
ஆனந்தம், ரன், பையா, சண்டைக்கோழி என ரசிகர்கள் விரும்பும் வகையிலான படங்களை கொடுத்து வந்தவர் இயக்குனர் லிங்குசாமி. பின்னர் பட தயாரிப்பிலும் இறங்கி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர். ஒரே நேரத்தில் உத்தம வில்லன் படத்தை தயாரித்ததன் மூலமாகவும் அஞ்சான் படத்தை இயக்கியதன் மூலமாகவும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தார். அதிலிருந்து மீண்டு வந்து விடலாம் என தெலுங்கு இளம் நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து வாரியர் என்கிற படத்தை இயக்கினார். அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை.
கார்த்தியை வைத்து இவர் இயக்கிய பையா திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக மகாபாரதம் கதையை தழுவி அர்ஜுனன், அபிமன்யு என்கிற இரண்டு கதாபாத்திரங்களை வைத்து இரண்டு பாகங்களாக ஒரு சரித்திர படத்தை இயக்கும் வேலைகளை ஈடுபட்டுள்ளார் லிங்குசாமி.
தமிழில் இதற்கான கதை எழுதும் வேலைகளில் எழுத்தாளர் ஜெயமோகனும், ஹிந்தியில் இதற்கான வேலைகளை பிரபல பாலிவுட் கதாசிரியர் ஒருவரும் கவனித்து வருகின்றனர். மிகப்பெரிய பாலிவுட் நிறுவனம் ஒன்று இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக லிங்குசாமி கூறியுள்ளார்.