அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டா தளத்தில் பயணித்து வருகிறார். இவரின் கணக்கு திடீரென நீக்கப்பட்டது. சமீபத்தில் இவர் இசையமைப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‛கோட்' படத்தில் இருந்து ‛விசில் போடு' என்ற பாடல் வெளியானது. 38 மில்லியன் பார்வைகளை இந்தப்பாடல் கடந்தாலும் ரசிகர்களை கவரவில்லை என அனிருத் ரசிகர்களும், யுவன் ரசிகர்களும் சண்டையிட்டு வந்தனர். இதனால் தான் யுவன் இன்ஸ்டாதளம் நீக்கப்பட்டதாக செய்தி பரவியது. திடீரென யுவன் இன்ஸ்டா கணக்கு இல்லாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள யுவன், ‛‛இது சம்பந்தப்பட்ட தகவல்களை அனுப்பியவர்களுக்கு நன்றி. தொழில்நுட்ப பிரச்னையால் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது. எனது இன்ஸ்டா கணக்கை மீட்க எனது குழுவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விரைவில் நான் சந்திக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.