விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
ஒரு வாரம் கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து வாராவாரம் புதிய படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த வாரம் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. தேர்தலே வந்தாலும் புதிய படங்கள் வருவதை நிறுத்த வாய்ப்பில்லை என இந்த வாரமும் சில புதிய படங்கள் வெளியாக உள்ளன.
ஏப்ரல் 19ம் தேதியன்று பகல் நேரக் காட்சிகள் கண்டிப்பாக நடைபெறாது. மாலை 6 மணிக்கு மேல் வேண்டுமானால் காட்சிகள் நடைபெறலாம். இருந்தாலும் பரவாயில்லை அன்றைய தினம் வருகிறோம் என 'வல்லவன் வகுத்ததடா' என்ற படம் வெளியாகிறது.
அடுத்து ஏப்ரல் 20ம் தேதி 'பைன்டர், சிறகன்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல், தேர்வுகள், பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் என கடந்த ஓரிரு வாரங்களாக தியேட்டர்களுக்கு மக்கள் வரவில்லை. தேர்வுகள் ஏறக்குயை முடிந்துவிட்டன. தேர்தலும் இந்த வாரம் முடிந்துவிடும். ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளன.
இருந்தாலும் வரும் வாரங்களில் பல படங்கள் வர உள்ளதால் நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழ் சினிமா உலகம் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.