நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி | 'பத்த வைக்கும் பார்வைக்காரி' வைஷ்ணவி | அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு: 'நோ' சொன்ன பிரியங்கா சோப்ரா; காரணம் என்ன ? | 3 நாளில் 100 கோடி கடந்த 'குட் பேட் அக்லி' | பிளாஷ்பேக்: ஜெயலலிதாவின் வெள்ளித்திரைப் பயணத்திற்கு வெளிச்சம் காட்டிய “வெண்ணிற ஆடை” | புதிய காதலியுடன் விழாவில் ஆமீர்கான் | பராசக்தி, தேவதையை கண்டேன், கிங்ஸ்டன் - ஞாயிறு திரைப்படங்கள் | அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் |
சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்திய ராணுவ வீரர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் இன்னும் சிவகார்த்திகேயன் சம்மந்தப்பட்ட 20 சதவீத படப்பிடிப்பு காட்சிகள் மீதமுள்ளதால் அடுத்த மாதத்தில் இதன் மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். மேலும், ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்ட படக்குழு இப்போது செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 5ம் தேதி விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.