அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
2024ம் ஆண்டின் காலாண்டு எந்தப் படத்தையும் கரை சேர்க்காமல் நட்டாற்றில் தவிக்கவிட்டு கடந்து போனது. தேர்தலுக்குப் பிறகு பல படங்கள் இந்த ஆற்றில் நீந்த வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 'இந்தியன் 2, வேட்டையன்' ஆகிய படங்களின் வெளியீடு பற்றிய அறிவிப்புகள் கடந்த வாரம் வந்தது. இன்று விஜய் நடிக்கும் 'கோட்' பட ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகிவிட்டது
அடுத்து அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி', விக்ரம் நடிக்கும் 'தங்கலான்', சூர்யா நடிக்கும் 'கங்குவா', கார்த்தி நடித்து வரும் இரண்டு படங்கள், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்', விஜய் சேதுபதி நடிக்கும் 'மகாராஜா', ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர், ஜெனி', சூரி நடிக்கும் 'விடுதலை 2', ஆகிய படங்களின் அறிவிப்புகளும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படங்களைத் தவிர தற்போது தயாரிப்பில் இருக்கும் சில முக்கிய படங்களின் வெளியீட்டு அறிவிப்பும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு வெளியாகலாம்.