கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
தமிழில் பல படங்களில் குணச்சித்ர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்த அருள்மணி(65) மாரடைப்பால் சென்னையில் நேற்று இரவு காலமானார்.
தமிழில் பொன்னுமணி, தர்மசீலன், கருப்பு ரோஜா, அழகி, வேல் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் அருள்மணி. நடிப்பு தவிர்த்து நடிப்பு மற்றும் இயக்குனர் பயிற்சிக்கான பள்ளியும் இவர் நடத்தி வந்தார்.
அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளராகவும் உள்ளார். பார்லிமென்ட் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கடந்த 10 நாட்களாக பல்வேறு ஊர்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தார். ஓய்வுக்காக சென்னை வந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
மறைந்த அருள்மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டது. மதியத்திற்கு மேல் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது. அருள்மணி மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.