14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் |
'ஜவான்' படத்தின் மூலம் பான் இந்தியா இயக்குனராக உயர்ந்துள்ளவர் தமிழ் இயக்குனரான அட்லி. அவரது அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போவது அல்லு அர்ஜுன் என தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் தயாரித்து பான் இந்தியா படமாக அப்படத்தை வெளியிடப் பேசி வருகிறார்கள்.
பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது அட்லி புதிய 'கண்டிஷன்' ஒன்றைப் போட்டுள்ளாராம். அதன்படி படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை அவருக்குத் தர வேண்டும் என்று கேட்கிறார் என டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொதுவாக ரஜினிகாந்த் போன்ற உச்ச நடிகர்கள் சிலர்தான் இப்படி லாபத்தில் பங்கு கேட்பார்கள். ஆனால், ஒரு இயக்குனர் இப்படி கேட்பது தெலுங்கு திரையுலகத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எல்லா பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடிந்தால் அல்லு அர்ஜுன் பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.