அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் |

கடந்த 2014ம் ஆண்டு அரண்மனை படத்தின் முதல் பாகத்தை இயக்கினார் சுந்தர்.சி. அப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்த நிலையில், 2016ல் 2ம் பாகமும், 2021ல் 3ம் பாகத்தையும் இயக்கி வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை இயக்கி உள்ளார் சுந்தர்.சி. அவரே நாயகனாகவும் நடித்திருக்கும் இந்த படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படத்தை நடிகை குஷ்புவின் அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏப்ரலில் திரைக்கு வரவுள்ள அரண்மனை-4 படத்தின் டிரைலர் நேற்று (மார்ச் 30) வெளியானது.
ராஷி கண்ணா
டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை ராஷி கண்ணா பேசியதாவது: எல்லா அரண்மனை படத்தை விடவும் இந்தப் படம் கண்டிப்பாக பிரமாண்டமாக இருக்கும். சுந்தர் சி அத்தனை அழகாக படத்தை எடுத்துள்ளார். நடிகை தமன்னாவுடன் இணைந்து தெலுங்கு படத்தில் வேலை செய்துள்ளேன். இப்போது தமிழில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. படம் அட்டகாசமாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
தமன்னா
நடிகை தமன்னா பேசியதாவது: சுந்தர் சி, குஷ்பூ இருவரும் எனக்கு பேமிலி மாதிரி. பணம், வாய்ப்பு எல்லாம் அப்புறம் தான். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சுந்தர் சி.,யின் படம் என்றால் ஓகே; என்ன படம் வேண்டுமானாலும் செய்யலாம், அவரை அவ்வளவு நம்புகிறேன். மிகத் திறமையான இயக்குனர்.
பெண்களை மையமாக வைத்து எல்லோரும் ரசிக்கும் படி கதை செய்துள்ளார், அவருக்கு நன்றி. குஷ்பூ நினைத்தால் முடியாதது எதுவுமே இல்லை. சினிமா, பொலிடிகல் என எல்லாவற்றிலும் அசத்துகிறார். அவர் என் இன்ஸ்பிரேஷன். ராஷி கண்ணாவும் நானும் ஏற்கனவே தெலுங்கு படம் செய்துள்ளோம். மிகச்சிறந்த கோ ஆர்டிஸ்ட், உண்மையானவர், என்னை அதிகம் நேசிப்பவர். இப்படம் வெளியாவதற்காக நானும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
சுந்தர் சி
இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது: இப்போது அரண்மனை நான்காம் பாகத்துடன் வந்துள்ளேன். முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிஸாக மாறும் என நினைக்கவே இல்லை. அரண்மனை 3 படத்திற்கு கிடைத்த வெற்றி தான் இப்படம் உருவாக காரணம். அரண்மனை 4 படம் எடுக்கலாமா எனத் தயங்கினேன். அந்த நேரத்தில் ஒரு பயணம் மேற்கொள்கையில் ஒரு சின்ன பெண், என்னிடம் அங்கிள் அரண்மனை 4 எப்போது வரும் என்றார். அந்தப்பெண் என் தயக்கத்தை போக்கிவிட்டார். உடனே இந்த படம் ஆரம்பித்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.