டார்க் மேக்கப்பில் நடித்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராதாரவி | பிளாஷ்பேக் : இப்படியும் நடந்திருக்கு | திட்டமிட்டபடி படத்தை முடித்தோம் : விஜய் மகன் ஜேசன் | மகன் படப்பிடிப்பை பார்க்க வந்த தந்தை மம்முட்டி | தமிழ் சினிமாவில் வெற்றி குறைய நடிகர்களின் தலையீடு தான் காரணம் : திருப்பூர் சுப்ரமணியம் | விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேசுக்கு வெற்றியை கொடுக்குமா ‛ரெளடி ஜனார்தனா' | அந்த நிஜ ஹீரோவை சந்திக்கணும் : இயக்குனர் தமிழ் விருப்பம் | சென்னை திரைப்பட விழாவில் விருது : தேசிய விருதை அள்ளுமா டூரிஸ்ட் பேமிலி | தயாரிப்பாளர் சங்க தேர்தல் : தமிழ் குமரனின் நலன் காக்கும் அணி அறிவிப்பு |

2026ம் ஆண்டின் ஆரம்பமே தென்னிந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை ஒரு அதிரடியாக ஆரம்பமாகப் போகிறது. தமிழைப் பொறுத்தவரையில் ஜனவரி 9ம் தேதி விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்', ஜனவரி 14ம் தேதி சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள 'பராசக்தி', ஆகிய படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. வேறு படங்கள் இந்தப் போட்டியில் இடம் பெறுமா என்பது சந்தேகம்தான்.
'ஜனநாயகன், பராசக்தி' ஆகிய இரண்டு படங்களுமே பான் இந்தியா படங்களாக வர உள்ளன. இருந்தாலும் தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்தப் படங்கள் கடும் போட்டியை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தெலுங்கில் பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்துள்ள மற்றொரு தெலுங்குப் படமான 'மன ஷங்கர்வரபிரசாத்காரு' படத்தின் வெளியீடும் ஜனவரி 12ம் தேதி என தற்போது அறிவித்துள்ளனர்.
2026 பொங்கல், சங்கராந்தி ஆகியவற்றை முன்னிட்டு ஓரிரு நாட்கள் இடைவெளியில் இரண்டு மொழிகளிலும் இப்படங்கள் போட்டியிட உள்ளது. இந்தப் படங்களின் நட்சத்திரங்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மொத்தமாக திருவிழா போல இப்படங்களின் வெளியீடு இருந்தாலும் தியேட்டர்கள் அவ்வளவு ரசிகர்கள் கூட்டத்தை எப்படித் தாங்கப் போகிறார்களோ?. இந்தப் படங்களால் கூட்டம் இல்லாமல் போயுள்ள தியேட்டர்களுக்கு ரசிகர்கள் மீண்டும் வந்தால் மகிழ்ச்சிதான் என்பதே திரையுலகினரின் நம்பிக்கையாக உள்ளது.