வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

இந்திய சினிமாவில் முதல் புகழ் பெற்ற நடிகை என்றால் அது தேவிகா ராணிதான். 1908ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் பிறந்த இவர் பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை ராணுவ அதிகாரி. பெரிய கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர். அவரது முன்னோர்கள் ஆங்கில அரசில் பெரிய பதவியில் இருந்தவர்கள். கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் உறவினர்.
லண்டனில் படித்த தேவிகா ராணி. பள்ளி படிப்பு முடிந்ததும் நடிப்பு, நடனம் கற்றார். இவரது கணவர் சினிமா தயாரிப்பாளர் என்பதால் அவருடன் இவரும் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டார். சில குறும்படங்களை இயக்கினார். ஆங்கிலம், ஹிந்தியில் 'கர்மா' என்ற முதல் பேசும்படத்தை தயாரித்தார். இந்த படத்தில் அவர் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் லிப்லாக் முத்தக்காட்சி இடம்பெற்று அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய சினிமாவில் முதல் லிப் லாக் முத்தக்காட்சி இது.
அதன்பிறகு ஏராளமான படங்களில் நடித்த தேவிகா ராணி சொந்தமாக ஸ்டூடியோ கட்டினார், தியேட்டர் கட்டினார், சினிமாவின் அத்தனை பணியிலும் ஈடுபட்ட தேவிகா ராணி இந்திய சினிமாவின் முதல் பெண் ஆளுமை என்று போற்றப்படுகிறார். இந்திய சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை முதலில் பெற்றவரும் இவர்தான். இன்று தேவிகா ராணியின் 116வது பிறந்த நாள்.




