ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் சரித்திரப் படம் 'கங்குவா'.
இப்படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட 38 மொழிகளில் வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். 'பாகுபலி, கேஜிஎப், ஆர்ஆர்ஆர், ஜவான்' படங்கள் போல இந்தப் படத்தையும் பெரிய வெற்றி, பெரிய வசூல் தரும் விதத்தில் பிரமாண்டமாக உருவாக்கி வருவதாகத் தெரிகிறது.
இந்தப் படத்தின் காரணமாக சூர்யா நடிப்பில் கடந்த வருடம் ஒரு படம் கூட வெளியாகவில்லை. சூர்யா நடித்து கடைசியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு 'எதற்கும் துணிந்தவன்' படம் வெளிவந்தது.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வர உள்ள 'கங்குவா' படத்தின் டீசரை இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிட உள்ளார்கள். தமிழ்ப் பட டீசர்களில் இது ஒரு புதிய சாதனையைப் படைக்குமா என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.