ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த 2013ல் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக ஆன படம் 'சூது கவ்வும்'. இதில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன்,பாபி சிம்ஹா,சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.
தற்போது சூது கவ்வும் 2ம் பாகத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த பாகத்தை எம் எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இவர் இயக்கிய முதல் படமான 'யங் மங் சங்' இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கின்றார். சத்யராஜ், கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு பல கட்டமாக சென்னை நகரை சுற்றி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகின்ற மார்ச் 22ம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.