எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, சினேகா, லைலா, மோகன், ஜெயராம் மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'.
இப்படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கிறார் என்பது சமீபத்தில் வெளியான உறுதியான தகவல். இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் பேசினார்களாம். ஆனால், அதற்கு அனுஷ்கா மறுத்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய் ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். நீண்ட இடைவெளியாகிவிட்டதால் அவரை மீண்டும் நடிக்க வைத்தால் தெலுங்கிற்கும் நன்றாக இருந்திருக்கும் என்பதுதான் காரணமாம்.
அவர் நடிக்க மறுத்ததால் த்ரிஷாவிடம் பேசினார்களாம். அவர் ஓகே சொல்லி படப்பிடிப்பும் சில நாட்கள் நடந்துள்ளது என்கிறார்கள். அடுத்த அப்டேட்டில் த்ரிஷாவும் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகலாம். ஏற்கெனவே இந்தப் படத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். 'லியோ' வெற்றிக் கூட்டணியான விஜய், த்ரிஷா மீண்டும் இந்தப் படத்தில் இணைவதும் படத்திற்கு சிறப்புதான் என்று படக்குழு நினைக்கிறதாம்.
இது பொய்த் தகவலா அல்லது உண்மைத் தகவலா என்பது விரைவில் தெரிய வரும்.