மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், மணிகண்டன், ஸ்ரீகவுரிப்ரியா, கண்ணா ரவி மற்றும் பலர் நடிப்பில் பிப்ரவரி 9ம் தேதி வெளியான படம் 'லவ்வர்'. ஓரளவிற்கு வரவேற்பான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் மிதமான வசூலைக் கொடுத்துள்ளது. நேற்றுடன் இப்படம் 25 நாளைக் கடந்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரையில் வெளிவந்த படங்கள் வசூல் ரீதியாக பெரும் சாதனையைப் படைக்கவில்லை என்றாலும் சில படங்கள் 25 நாட்களைக் கடந்து ஓடியிருக்கிறது.
“அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சாப்ர் 1, சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார், வடக்குபட்டி ராமசாமி, தூக்குதுரை” ஆகிய படங்கள் 25 நாட்களைக் கடந்துள்ளது. அந்த வரிசையில் தற்போது 'லவ்வர்' படமும் இணைந்துள்ளது.
நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியாகும் நிலையில் சில படங்கள் அந்த நான்கு வாரங்களைக் கடப்பது பெரிய விஷயம்தான்.