ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

'பாகுபலி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர் ராணா டகுபட்டி. அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருக்கு இன்னும் பெரிய அளவிலான படங்கள் அமையவில்லை. 'பாகுபலி'யில் நாயகனாக நடித்த பிரபாஸ் பான் இந்தியா நடிகராக சில பிரம்மாண்டப் படங்களில் நடித்தார். ஆனால், ராணாவுக்கு 'பாகுபலி' அளவிலான வெற்றி அவரது அடுத்தடுத்த படங்களில் கிடைக்கவில்லை.
தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தில் நேற்று முதல் நடிக்க ஆரம்பித்துள்ளார். “நாள் 1, படப்பிடிப்பில்… நெருப்பைப் பற்ற வைப்போம்… டி 170” என்று இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ராணா நடிக்கிறார். இப்படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த ஆண்டில் வெளியாக உள்ள தமிழ்ப் படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும படங்களில் ஒன்றாக இப்படம் அமைந்துள்ளது.