அனந்தா திரை படைப்பல்ல... இறை படைப்பு : பா.விஜய் நெகிழ்ச்சி | பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் | 150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் |

அஜித் - ஷாலினி தம்பதிகளுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். இருவருமே பள்ளியில் படித்து வருகின்றனர். அனோஷ்காவுக்கு 16 வயது ஆகிறது. ஆத்விக்கிற்கு 9 வயது ஆகிறது. ஆத்விக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். எப்சி எனும் கால்பந்து கிளப்பிற்காக விளையாடி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்விக்கின் பிறந்தநாளை அஜித் எளிமையாக கொண்டாடினார். மகன் கால்பந்து வீரர் என்பதால் முன்னணி கால்பந்து வீரர்களான ரொனால்டினோ, டேவிட் பெக்காம் பேனர் வைத்து புட்பால் வடிவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். ஃபுட் பால் ஜெர்சி அணிந்தே கேக் வெட்டினார் ஆத்விக். இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை அஜித்தின் மனைவி ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.