ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படமாக 'த கோட்' படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது.
வெங்கட் பிரபுவின் முன்னாள் உதவியாளரான இயக்குனர் ரஞ்சித் தயாரித்துள்ள 'ஜே பேபி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக வெங்கட் பிரபு கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடித்த பின் அவசர அவசரமாக நண்பர் ஒருவரின் பைக்கிலேயே 'கோட்' படப்பிடிப்புக்குப் புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்பாக பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “கோட்' அப்டேட் கொடுக்கலாம். ஆனால், ரொம்ப சீக்கிரமா கொடுக்கற மாதிரி இருக்கும். கரெக்டான டைம்ல கொடுக்கணும்னு வெயிட் பண்றோம். கொஞ்சம் பொறுமையா இருங்க. பெரிய போஸ்ட் புரொடக்ஷன் உள்ள படம் இது. இப்ப கூட ஷுட்டிங் போயிட்டிருக்கு. நடுவுல சின்ன கேப், என்னோட பசங்க படம், அதான் நான் வந்து கலந்துக்கிட்டேன். 'கோட்' படம் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நோக்கி போயிட்டிருக்கு,” என்றார்.