மலையாளப் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் கேரளாவை விடவும் தமிழகத்தில் அதிக வசூலைக் குவிக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் சொல்லி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவிலும் இப்படம் மலையாளப் படங்களின் வரலாற்றில் புதிய வசூல் சாதனையை அங்கு படைக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு மோகன்லால் நடித்து வெளிவந்த 'லூசிபர்' படத்தின் வசூலைக் கடந்து தற்போது 7 லட்சம் யுஎஸ் டாலர் வசூலை நெருங்கியுள்ளதாம். வரும் வாரத்தில் 10 லட்சம் யுஎஸ் டாலர் வசூலைப் பெறும் என்கிறார்கள். அப்படி கடந்தால் மலையாளப் படம் ஒன்று அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் 1 மில்லியன் யுஎஸ் டாலரைக் கடந்த முதல் படம் என்ற பெருமையைப் பெறும்.
தமிழகத்தைப் போலவே தமிழ் சினிமா ரசிகர்களும் அமெரிக்காவில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தைப் பார்க்க அதிக ஆர்வம் காட்டுவதே அதற்குக் காரணமாம். உலக அளவில் விரைவில் 100 கோடி வசூலைக் கடக்க உள்ள இப்படத்தின் பட்ஜெட் 15 கோடி மட்டுமே என்று தகவல்.