ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஷங்கர் - கமல் கூட்டணியில் 1996ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‛இந்தியன்'. இதன் இரண்டாம் பாகம் கடந்த 2019ல் துவங்கியது. படப்பிடிப்பு நடந்து வந்த சூழலில் அதன்பின் எழுந்த கொரோனா பிரச்னை, படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து, இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் இடையே எழுந்த மோதல் உள்ளிட்ட பிரச்னைகளால் இந்த படம் 4 ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் இருந்தது. ஒருவழியாக தற்போது படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.
இந்தியன் 2வில் கமல் உடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இந்த படம் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தியன் 2 படம் மே மாதம் இறுதியில் வெளியாகும் என்கிறார்கள். அதாவது மே 23 அல்லது மே 30ல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்தியன் 2 வெளியாக உள்ளது. இந்தியன் 2வின் தொடர்ச்சியாக இந்தியன் 3 படமும் அடுத்தாண்டு வெளியாக உள்ளது.