ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஹிந்தியில் தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பக்னானியை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் பிப்., 21ல் கோவாவில் கோலாகலமாக நடந்தது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மணமக்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், ‛‛திருமணத்திற்கு என்னை அழைத்தமைக்கு நன்றி. ரகுலும், ஜாக்கியும் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் பயணத்தைத் தொடங்குகின்றனர். இந்த தருணத்தில் அவர்களின் திருமணத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா சூழலிலும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து, கனவுகளையும், ஆசைகளையும் நனவாக்கும் தேடலில் ஒருவரது கைகளை மற்றொருவர் பற்றிக் கொண்டும், அன்புடன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டும், குறைகளை ஆமோதித்து, நல்லனவற்றை கற்றுக் கொள்ளும் பயணமாக அமையட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் வாழ்த்து கடிதத்தை வெளியிட்டு, ரகுல், ஜாக்கி இருவரும் தங்களது நன்றியை பிரதமருக்கு தெரிவித்துள்ளனர். அதோடு இந்த கடிதத்தை பிரேம் செய்து வைத்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.