ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி | 'மிஸ்டர்.பாரத்' படப்பிடிப்பு நிறைவு : லோகேஷ் கனகராஜ் நேரில் வாழ்த்து | நிவின் பாலி மீது பணமோசடி வழக்கு | ஒரு வருடத்திற்கு முன்பே விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்: கிறிஸ்டோபர் நோலன் புதிய சாதனை | பிளாஷ்பேக்: பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமான தியாகராஜன் | பிளாஷ்பேக் : நாட்டியத்தால் சினிமாவை இழந்த பி.கே.சரஸ்வதி |
கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவு காரணமாக, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக மகாபலிபுரம் அருகே கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி ஏ.வி.ராஜூ என்பவர் ஒரு வீடியோவில் பேசி இருந்தார். அதில் நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் குறித்து அவதூறாக பேசியிருந்தார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ராஜூ மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் நடிகர் கருணாஸ். அதில், ‛‛என் மீது வன்மம் கொண்டு அவதூறாக மற்றும் அருவருப்பான உண்மைக்கு மாறான செய்தியை பரப்பி உள்ளார் ராஜூ. நடிகை த்ரிஷா பற்றியும், என்னையும் தொடர்புபடுத்தி பேட்டி கொடுத்துள்ளார். இது பல யு-டியூப் சேனலிலும் வெளியாகி உண்மைக்கு மாறாக அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். எனவே ராஜு மற்றும் பல யுடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடியோவை நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.