ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பிரேம்குமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் 2018ல் வெளிவந்த படம் '96'. அழகான காதல் கதையாக வந்த இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் சம்பந்தப்பட்ட பலருக்கும் நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது. குறிப்பாக த்ரிஷாவுக்கு இரண்டாவது இன்னிங்ஸை தமிழ்த் திரையுலகத்தில் ஏற்படுத்தித் தந்தது.
இப்படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு மூன்று தினங்களுக்கு முன்பு ரீ-ரிலீஸ் செய்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 100 தியேட்டர்களில் இப்படம் வெளியாகி உள்ளது. சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சமீபகாலமாக ரீ-ரிலீஸ் படங்களை இளம் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். இந்த வாரம் ஜெயம் ரவி நடித்த 'சைரன்' படம் தவிர முக்கிய நடிகர்களின் படங்கள் வேறு வெளியாகாத காரணத்தால் '96' படத்தைப் பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.




