சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் நடித்து உலக அளவில் கவனிக்கப்பட்ட நடிகரானார் பிரபாஸ். அதன் பிறகு, சாஹோ, ஆதிபுருஸ், ராதே ஷ்யாம், சலார் போன்ற படங்கள் வெளியாகின. ஆனால் இவை எதுவும் பாகுபலி அளவுக்கு வரவேற்பை தரவில்லை. தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு ஸ்பிரிட் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இந்த படத்தை முடித்ததும் சலார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபாஸ் அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். அதோடு இன்னும் சில மாதங்களுக்கு நடிப்பிலிருந்து விலகி இருந்து, தனது பாடி லாங்குவேஜை மாற்றும் சில பயிற்சிகளையும் அவர் எடுக்க போகிறாராம். அதன் காரணமாகவே கல்கி படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்க இருக்கும் ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.