நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் என்பவர் இயக்க இருந்த சென்னை ஸ்டோரி என்ற சர்வதேச படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் தற்போது அந்த படத்தில் சமந்தாவுக்கு பதிலாக ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் உருவாகும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் டிடெக்டிவாக நடிக்கிறார். இந்த படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நான் சென்னை பொண்ணாக இருப்பதால் சென்னையின் தனித்துவத்தை காட்டப் போகும் இந்த படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். பிலிப் ஜான் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் . மேலும் இப்படத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தற்போது மயோசிட்டீஸ் நோய்க்கான சிகிச்சையில் ஈடுபட்டிருப்பதால் இந்த படத்தில் இருந்து சமந்தா விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.