2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

'மதராஸி' படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. அதன் பிறகு காளை, பரதேசி, முனி, சிவலிங்கா, உள்ளிட்ட படங்களில் நடித்தார். கன்னடம், மலையாளம், தெலுங்கு படத்தில் நடித்துள்ள வேதிகா தற்போது தமிழில் வினோதன், ஜங்கிள் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் முதல் முதலாக 'பியர்' என்னும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் தமிழிலும் வெளியாகிறது.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இது மிகவும் அருமையான கதை. எந்த மாதிரியான படமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரம் குறித்து நிறைய தயாரிப்புகள் இருக்க வேண்டும். இந்த கதாபாத்திரம் குறித்து நிறைய கற்றுக் கொண்டேன். எனது மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது போது 'பியர்' முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லர். இப்படத்தில் என்னை சுற்றித்தான் அனைத்து விஷயங்களும் நிகழும் என்பதால் நடிப்பிற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
தற்போதுதான் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. தனக்கு என்ன வேண்டும் என்பதில் இயக்குனர் மிகவும் தெளிவாக உள்ளார். இப்படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இப்படத்திற்கு அனுப் ரூபென்ஸ் இசை அமைக்கிறார். ஆன்ட்ரூ ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர்கள் ஜெயபிரகாஷ், அனீஷ் குருவில்லா, சாயாஜி ஷிண்டே என படக்குழுவினர் அனைவரும் மிகவும் அனுபவமிக்கவர்கள் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது” என்கிறார்.