ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள மீனா, கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து நடித்து வருகிறார். 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் தெறி படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார்.
கடந்த 2022ம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக மீனாவின் கணவர் மறைந்து விட்டார். பின்னர் அதில் இருந்து மீண்டு வந்து தற்போது தமிழில் ரவுடி பேபி, மலையாளத்தில் ஆனந்தபுரம் டைரி போன்ற படங்களில் நடித்து வருகிறார் மீனா. இந்த நிலையில் மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக தொடர்ந்து ஊடகங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது.
இதுபற்றி ஒரு பேட்டியில் அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ஒரு ஹீரோ இதுபோன்று மறுமணம் செய்யாமல் இருந்தால் அவரைப் பற்றி எந்த வதந்திகளும் வெளிவருவதில்லை. அதுவே ஒரு ஹீரோயின் கணவரை இழந்து தனியாக இருந்தால் மட்டும் இது போன்ற கீழ்த்தரமான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். எத்தனையோ பெண்கள் கணவரை இழந்தும் தனியாக வாழ முடியும் என்பதை நிரூபித்து காட்டி வருகிறார்கள். அதனால் நானும் இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்காமல் எனது மகள் நைனிகாவுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்போதுமே எனது வாழ்வில் இன்னொரு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி தன்னைப்பற்றி வெளியாகிவரும் வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மீனா.