திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் | இரவு 12மணிக்கு மிஷ்கினுக்கு ஐ லவ் யூ சொன்ன இயக்குனர் |
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 என்ற படத்தில் அறிமுகமானவர் மனிஷா யாதவ். அதையடுத்து ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பின்னர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டு திரை உலகில் இருந்து விலகிவிட்டார்.
என்றாலும் இன்ஸ்டாகிராமில் அவ்வபோது தனது புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் புத்தாண்டு நாளை பிறக்க இருப்பதை அடுத்து, 2023ம் ஆண்டில் கடற்கரை மற்றும் அருவிகளில் தான் நீராடி மகிழ்ந்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் மனிஷா யாதவ்.