மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைபாடு காரணமாக டிச.,28ல் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த திரையுலக பிரபலங்கள் பலரும் அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். அப்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, "விஜயகாந்த் நடித்த தவசி படத்திற்கு நான் தான் வசனம் எழுதினேன். அந்த சமயத்தில் அவருடன் நெருங்கி பழகி அவருடைய குணாதிசயங்களை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது" என்று கூறியிருந்தார்.
விஜயகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற தவசி படத்தை இயக்குனர் உதயசங்கர் என்பவர் இயக்கி இருந்தார். அந்த படத்தின் டைட்டில் கார்டில் திரைக்கதை வசனம் என உதயசங்களின் பெயர் தான் இடம் பெற்றுள்ளது. இதனை குறிப்பிட்டு பலரும் சீமான் வேண்டும் என்றே பெருமைக்காக பொய் சொல்கிறார் என சோசியல் மீடியாவில் கிண்டலடித்து குற்றம் சாட்ட துவங்கினர். ஒருவர் இன்னும் ஒரு படி மேலே சென்று படத்தின் இயக்குனர் உதயசங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் உதயசங்கர், “தவசி படத்திற்கு முழு வசனங்களையும் எழுதியது சீமான் தான். படப்பிடிப்பில் சின்னச்சின்ன மாற்றங்களை மட்டுமே நான் செய்தேன். ஆனால் அந்த சமயத்தில் ஏற்கனவே இரண்டு மூன்று தோல்வி படங்களை வரிசையாக கொடுத்திருந்த அவர் அடுத்த படம் இயக்கும் வாய்ப்புக்காக காத்திருந்தார். தவசி படத்தில் வசனகர்த்தா என தனது பெயரை போட்டால் பலரும் தன்னை வசனம் எழுத மட்டுமே அழைக்க ஆரம்பித்தால், அடுத்ததாக தனக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்காதோ என பயந்து வசனகர்த்தா என தனது பெயரை போட வேண்டாம் என கூறிவிட்டார். அதனால் தான் டைட்டில் கார்டில் முதலில் சீமானுக்கு நன்றி தெரிவித்து இருந்தோம்” என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.