ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான டாடா திரைப்படம் ஒரு பீல் குட் படமாக ரசிகர்களை கவர்ந்தது. அதைத்தொடர்ந்து அந்த படத்தில் நாயகனாக நடித்த பிக்பாஸ் புகழ் கவினுக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிக அளவில் தேடி வருகின்றன. அந்த வகையில் நடன இயக்குனரும் நடிகருமான சதீஷ் முதன்முறையாக டைரக்சனில் அடி எடுத்து வைக்கும் படத்தில் கதாநாயகனாக கவின் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்திற்கு ‛கிஸ்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கவினுக்கு இதற்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான லிப்ட் மற்றும் டாடா ஆகிய படத்தின் டைட்டில்கள் நான்கு ஆங்கில எழுத்துக்களை கொண்டிருந்தன. அந்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதேபோல நான்கு எழுத்துக்களில் டைட்டில் வருமாறும் அதேசமயம் கதைக்கும் பொருந்துமாறும் இந்த கிஸ் என்கிற டைட்டிலை தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்திற்கு பொருத்தமான டைட்டிலை படக்குழுவினர் முடிவு செய்தபோது, ஏற்கனவே இயக்குனர் மிஷ்கின் அந்த டைட்டிலை பதிவு செய்து வைத்திருந்தாராம். இதை கேள்விப்பட்டதும் படக்குழுவினர் கேட்டுக்கொண்டதன் பேரில் அந்தக் கதைக்கு பொருத்தமான டைட்டிலாக இருக்கும் என்பதால் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தார் என்றும் சொல்லப்பட்டது. அது இந்த டைட்டில் தானா என்பது தெரியவில்லை. விரைவில் இந்த டைட்டில் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.