ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படம் அடுத்த வாரம் டிசம்பர் 22ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்திற்காக இதுவரையிலும் எந்த ஒரு பெரிய அளவிலான புரமோஷன் நிகழ்வுகளையும் நடத்தவில்லை. எந்த ஊருக்கும் படக்குழுவினர் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் படக்குழுவினர் ஒரு சிறிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்கள். படத்தின் முதல் டிக்கெட்டை வெளியிடும் நிகழ்ச்சிதான் அது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா 70எம்எம் தியேட்டரில் திரையிட உள்ள முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை ராஜமவுலி படக்குழுவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ், பிருத்விராஜ், தயாரிப்பாளர் நவீன் எர்னேனி ஆகியோர் கலந்து கொண்டனர். படக்குழுவினரை ராஜமவுலி வீடியோ பேட்டி எடுக்கும் போது இந்த டிக்கெட் வெளியீட்டு நிகழ்வையும் நடத்தியுள்ளனர்.
'சலார்' படக்குழுவை ராஜமவுலி பேட்டி எடுக்கும் வீடியோ விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.




