தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியதன் மூலம் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் இயக்குனராக மாறிவிட்டார். அதேபோல அதுவரை சில படங்களில் நடித்திருந்த நடிகர் யஷ் இந்த படத்தின் மூலம் பான் இந்திய நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்றுவிட்டார். தற்போது இயக்குனர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 22ம் தேதி வெளியாக இருக்கிறது.
பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். அதே சமயம் சில நாட்களுக்கு முன்பாக கேஜிஎப் ஹீரோவான யஷ்ஷும் பிரசாந்த் நீலின் நட்புக்காக இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது. ஆனால் இது பற்றி படக்குழுவினர் யாரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள ஒரு பெண் குழந்தை நட்சத்திரம் சமீபத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியின்போது தன்னை அறியாமல் இந்த படத்தில் பிரபாஸ், பிரித்திவிராஜ், யஷ் இவர்கள் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த படத்தில் தற்போது யஷ் நடித்திருப்பது உறுதியாகி உள்ளது. விக்ரம் பட ரோலக்ஸ் சூர்யா கதாபாத்திரம் போல இதையும் சஸ்பென்சாக பட ரிலீஸின்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வெளிப்படுத்த இருந்த நிலையில் தற்போது ஒரு குழந்தை நட்சத்திரம் மூலமாக இந்த விஷயம் வெளிப்பட்டு விட்டது.




