ப்ரூஸ் லீ படத்தின் 'இன்ஸ்பிரேஷன்' தான் 'சிவா' | தமிழ் மார்க்கெட்டை குறி வைக்கும் ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ | தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா |

குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக உயர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். லியோ படத்தின் வெற்றிக்கு பின் ரஜினியின் படத்தை இயக்க தயாராகி வருகிறார். சமீபத்தில் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். இதில் முதல் வெளியீடாக ‛உறியடி' விஜயகுமார் நடித்த ‛பைட் கிளப்' படம் வரும் 12ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் லோகேஷின் பேஸ்புக் கணக்கு என கூறி அதிலிருந்து ஆபாச படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. பின்னர் அவரது பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதுபற்றி விளக்கம் அளித்துள்ள லோகேஷ், ‛‛நான் எக்ஸ் மற்றும் இன்ஸ்டா தளத்தில் மட்டுமே பயணித்து வருகிறேன். வேறு எந்த வலை தளத்திலும் இல்லை. என் பெயரில் வேறு தளங்களில் கணக்குகள் இருந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம். அன் பாலோ செய்து விடுங்கள்'' என தெரிவித்துள்ளார்.




