'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'சலார்' படத்தின் டிரைலர் நேற்று இரவு தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் யு டியூப் தளத்தில் வெளியானது.
ஐந்து மொழிகளிலும் சேர்த்து தற்போது வரை 40 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அதிகபட்சமாக ஹிந்தி டிரைலர் 18 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அடுத்து தெலுங்கு டிரைலர் 15 மில்லியன், தமிழ் டிரைலர் 3 மில்லியன், கன்னட டிரைலர், 2.5 மில்லியன், மலையாள டிரைலர் 2.4 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
24 மணி நேரம் முடிவதற்குள் மேலும் அதிகமான பார்வைகளைப் பெற இந்த டிரைலரால் முடியும். 'சலார்' டீசர் நான்கு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அந்த டீசர் இதுவரையிலும் 143 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. டீசரை விட டிரைலர் இன்னும் அதிகமான பார்வைகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு பாகங்களாக வெளிவர உள்ள இந்த படத்தின் முதல்பாகம் வரும் டிசம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது.