காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
சினிமாவில் ஒவ்வொரு படமும் வெளிவருவதற்குள் பல சிக்கல்களை சந்தித்தே வெளிவருகிறது. ஒரு சில படங்கள் மட்டுமே எந்த சிக்கலும் இல்லாமல் வெளிவருகிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படம் நவம்பர் 24ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. அப்படத்திற்காக இயக்குனர் கவுதம் மேனன் மட்டுமே புரமோஷன் செய்து வருகிறார்.
படத்தின் நாயகனான விக்ரம் இதுவரை இப்படம் குறித்து எந்தவிதமான பதிவுகளையும் அவரது சமூக வலைத்தளத்தில் போடவில்லை. ஜனவரி மாதம் வெளியாக உள்ள 'தங்கலான்' படத்தைப் பற்றி மட்டுமே பதிவிடும் விக்ரம் 'துருவ நட்சத்திரம்' படம் சார்ந்த பதிவுகளைத் தவிர்ப்பது ஏன் என்று தெரியவில்லை.
சமீபத்தில் கவுதம் மேனன் அளித்த பேட்டியில் கூட அடுத்தடுத்த பாகங்களை எடுப்பேன் என்றார். அதில் விக்ரம் தானே நடித்தாக வேண்டும். அப்படியிருக்க விக்ரம் இந்தப் படத்தைப் பற்றி பேசாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திடீரென ரத்து செய்துவிட்டனர். படத்தின் தமிழக வினியோக உரிமை வியாபாரம் இன்னும் முடிவடையவில்லை என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அதையும், சாட்டிலைட், ஓடிடி வியாபாரங்களையும் முடித்த பிறகுதான் பட வெளியீடு குறித்த உண்மை நிலவரம் தெரிய வரும் என்கிறார்கள்.