லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கடந்த தீபாவளிக்கு கார்த்தியின் ஜப்பான், லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட சில படங்கள் திரைக்கு வந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் வரப்போகிற பொங்கல் தினத்தில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், சுந்தர்.சி-யின் அரண்மனை 4, ஐஸ்வர்யா ரஜினி இயக்கி உள்ள லால் சலாம் போன்ற படங்கள் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது பொங்கல் ரேஸில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் மேரி கிறிஸ்துமஸ் என்ற ஹிந்தி படமும் இணைந்து இருக்கிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தை கிறிஸ்துமஸுக்கு வெளியிட திட்டமிட்டவர்கள் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையாததால் வெளியிடவில்லை. இந்த நிலையில் தான் தற்போது ஜனவரி 12ம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார்கள். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரினா கைப் நடித்திருக்கிறார் .