23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை ஓய்ந்த பாடில்லை. ரஜினிக்கு பிறகு விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார்கள். ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன குட்டிக்கதை அந்த சர்ச்சைக்கு மேலும் பரபரப்பு கூட்டியது. இப்படியான நிலையில் தான் லியோ படத்தின் வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் என்று கூறி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்.
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் நடித்திருக்கும் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படமும், பதிவும் மீண்டும் சூப்பர் ஸ்டார் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில், கமல்ஹாசனுக்கு ஒரு பூங்கொத்து கொடுக்கிறார் விஷ்ணு விஷால். கமல்ஹாசன் அருகே பாலிவுட் நடிகர் அமீர்கானும் நின்று கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை வெளியிட்டு, சூப்பர் ஸ்டார்கள் எப்போதும் சூப்பர் ஸ்டார்கள்தான் என்று அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து ரஜினி ஒருவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என்று விஷ்ணு விஷாலுக்கு சோசியல் மீடியாவில் கண்டனங்கள் எழுந்தன. அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சூப்பர் ஸ்டார்கள் என்பதற்கு பதிலாக ஸ்டார் என்று மட்டும் மாற்றி போட்டு உள்ளார். அதோடு சூப்பர் ஸ்டார்கள் எப்போதும் ஒரே காரணத்துக்காக சூப்பர் ஸ்டார் ஆக இருப்பார்கள். நான் அந்த பதிவை திருத்தியதால் பலவீனம் ஆகிவிட்டேன் என்று கூற முடியாது. சூப்பர் ஸ்டாராக இருக்கும் அனைவரையும் நான் விரும்புகிறேன். அதனால் என்னுடைய கருத்துக்களுக்கு யாரும் எதிர்மறையான கருத்துக்களை பரப்ப வேண்டாம். நமக்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். ஆனால் சூப்பர் ஸ்டார்கள் என் மரியாதைக்கு அப்பாற்பட்ட சாதனை படைத்தவர்கள். அனைவரையும் நேசித்து அன்பை பரப்புங்கள். வெறுப்பை பரப்பாதீர்கள். கடவுள் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்.