இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
மலையாளத்தில் இருந்து ஆண்டுக்கு குறைந்தது பத்து ஹீரோயின்கள் தமிழுக்கு வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலரே நிலைத்து நிற்கிறார்கள். குறிப்பாக நிமிஷா சஜயன் வலுவாக காலூன்றி வருகிறார். சித்தா, ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. இந்த நிலையில் அடுத்து வருகிறார் மமிதா பைஜு.
வளர்ந்து வரும் மலையாள நடிகை மமிதா பைஜு. சர்பபூரி பலாக்காரன் என்ற படத்தில் அறிமுகமான இவர் டக்னி, வர்த்தன், ஆபரேஷன் ஜீவா, கோகோ, சூப்பர் சரண்யா, பிரணய விலாசம், ராமச்சந்திரா போஸ் அண்ட் கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் 'ரெபல்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
இதில் அவர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்கிறார். படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார் அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் தயாராகிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.