வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தனுஷ் நடித்திருக்கும் 47வது படம் கேப்டன் மில்லர். அவருடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இந்த படம் பீரியாடிக் ஆக்சன் அட்வெஞ்சரஸ் படமாக உருவாகி இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வரவுள்ள கேப்டன் மில்லர் படம் குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில், இப்படம் திரைக்கு வருவதற்கு 38 நாட்கள் இருப்பதால் விரைவில் புரமோஷன் பணிகளை தொடங்கவிருக்கிறோம். சமீப காலமாக படங்களின் ஆடியோ விழாவை பிரமாண்டமாக நடத்துவது ஒரு ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதனால் இப்படத்தின் ஆடியோ விழாவையும் பிரமாண்டமாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதோடு இதுவரை தனுஷ் நடித்த படங்களில் இது ஒரு தனித்துவமான படமாக இருக்கும். தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆகவும் இந்த படம் இருக்கும். பிரிட்டிஷ்காரர்கள் இந்தியர்கள் மீது படையெடுத்த அந்த அடிமைத்தனத்தை மட்டுமின்றி இன்றைய சமூகத்தில் இருக்கும் அடிமைத்தனம், ஆதிக்க வர்க்கத்தின் செயல்களையும் பேசக்கூடியதாக இந்த கேப்டன் மில்லர் படம் இருக்கும் என்கிறார் அருண் மாதேஸ்வரன்.