வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது | சினிமாவில் நடக்கும் அநியாயங்களை பேசியதால் வாய்ப்பில்லை, சமையல் செய்து பிழைக்கிறேன் : ஸ்ரீரெட்டி புலம்பல் | பிளாஷ்பேக் : 40 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரான கஸ்தூரி ராஜா |
தமிழ், தெலுங்கு மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் அனுஷ்கா. இன்று தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு கடந்த 6 ஆண்டுகளில் “பாகமதி, சைலன்ஸ், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' ஆகிய 3 படங்களில் மட்டுமே நடித்துள்ளார் அனுஷ்கா. தற்போது 'கதனர்' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.
அதற்கடுத்து அனுஷ்கா நடிக்க உள்ள படம் அவரது 50வது படம். இதனிடையே, சிரஞ்சீவியின் 156வது படத்தில் அனுஷ்காவை நடிக்கக் கேட்டு அவர் இன்னும் சம்மதிக்கவில்லை என்கிறார்கள். அவர் நடிக்க மறுக்கவும் வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவரது 50வது படமாக 'பாகமதி' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம். அப்படத்தில் நடிக்கவே அனுஷ்கா அதிக ஆர்வத்துடன் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
43வது பிறந்தநாளைக் கொண்டாடும் அனுஷ்கா இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.