ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி மற்றும் பலர் நடிக்கும் படம் 'தங்கலான்'. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் விக்ரம் பேசுவதற்கு வசனங்களே இல்லை என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வந்தது. இந்நிலையில் அது குறித்து விக்ரம் ரசிகர் மன்றத் தலைவர் சூரியநாராயணன் ஒரு விளக்கமளித்துள்ளார்.
அதில், “தங்கலான்' படத்தில் விக்ரம் சாருக்கு வசனங்கள் இல்லை என சமூக வலைத்தளங்களில் ஒரு குழப்பம் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு நிருபர் அவரிடம் படத்தில் உங்களுக்கு வசனங்கள் இல்லையா என்று கேட்டார், அதற்கு விக்ரம், “டீசரில் எனக்கு டயலாக் இல்லை” என ஜோக்காக சொன்னார். 'தங்கலான்' படம் நேரடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட படம். படத்தில் அவருக்கு நிச்சயம் டயலாக்குகள் உண்டு,” என்று தெரிவித்துள்ளார்.