ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. விஜய் நடித்த படங்களுக்கு கடந்த சில வருடங்களில் இப்படியான வெற்றி விழா எதுவும் நடைபெற்றதில்லை. பட வெளியீட்டிற்கு முன்பாக இசை வெளியீட்டு விழா நடத்துவதுடன் நிறுத்திக் கொள்வார்கள்.
ஆனால், 'லியோ' படத்திற்கு இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்து விட்டார்கள். பின்னர் படம் வெளியான 12 நாட்களிலேயே வெளியீட்டு விழாவை நடத்தியதன் காரணம் என்ன என கோலிவுட்டில் ஒரு தகவலைத் தெரிவிக்கிறார்கள்.
படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய நிறுவனம் இசை வெளியீட்டு விழாவின் பிரத்யேக ஒளிபரப்பு உரிமைக்காவும் அதிகத் தொகை ஒன்றைக் கொடுத்தார்களாம். விழா நடக்காமல் போனதால் அந்தத் தொகையைத் திரும்பத் தருமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார்கள். அவ்வளவு தொகையைத் திருப்பித் தருவதற்குப் பதிலாக வெற்றி விழாவை நடத்தித் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர்.
அதன்பின் விஜய்யை சந்தித்து இது குறித்து பேசியிருக்கிறார் தயாரிப்பாளர். முதலில் அதற்கு மறுத்த விஜய், பின்னர் விழாவை ரொம்பவும் பரபரப்பாக்காமல் சிம்பிளாக நடத்துங்கள் என்று தெரிவித்தாராம். அதனால்தான் ரசிகர்களையும் அதிகம் விடாமல், பத்திரிக்கையாளர்களையும் அனுமதிக்காமல் விழாவை நடத்தி முடித்துள்ளார்கள் என்று கோலிவுட்டில் தெரிவித்தார்கள்.