ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாளத்தில் சமீபத்தில் விருதுகள் வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மோகன்லால் கலந்து கொண்டார். அப்போது மேடை ஏறிய மோகன்லால், மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் நடித்து பிரபலமான நான் ஆணையிட்டால் என்கிற முழுப்பாடலையும் அழகாக பாடி அரங்கில் இருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் பிரபலங்களும் கூட மோகன்லாலுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் யோகி பாபு இந்த வீடியோவை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு, செம செம.. சூப்பர் மோகன்லால் சார்.. என்று கூறியுள்ளார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் தமிழில் முதன்முறையாக கதாநாயகனாக மணிரத்னம் இயக்கத்தில் அறிமுகமான இருவர் படத்தில் கூட அவர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.