சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் |
மேத்யூ பெர்ரி ஹாலிவுட்டில் பல படங்களிலும் வெப் சீரிஸிலும் இடம் பெற்றிருந்த நடிகர். ஆனால், அவரை உலகெங்கிலும் ஒரு பரிச்சயமான முகமாக மாற்றியது 90களில் வெளியான 'சிட்-காம் பிரண்ட்ஸ்' - இல் அவர் நடித்த 'சாண்டலர் பிங்' கதாபாத்திரம் தான். பிரண்ட்ஸ் தொடரின் மூலம் பிரபலமான மேத்யூ பெர்ரி, மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையானார்.
இதன் காரணமாக பல முறை மறுவாழ்வு சிகிச்சைக்கு சென்று திரும்பினார். 2018ல் அதீத போதை பழக்கத்தால் பெருங்குடல் வெடிப்புக்கு ஆளானார், அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. தனது வாழ்வையும் போதை பழக்கத்தையும் முன்வைத்து சுயசரிதை ஒன்றையும் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் கடந்த ஆண்டு வெளியானது.
இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று (அக்.,28) வெந்நீர் குளியல் தொட்டியில் நினைவின்றி கிடந்துள்ளார் மேத்யூ. இதை கண்ட அவரது உதவியாளர் அவசர உதவிக்கு தகவல் கொடுத்துள்ளார். மருத்துவ குழு விரைந்து சென்றும் அவரை உயிருடன் காப்பாற்ற முடியவில்லை. அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 54 வயதனா மேத்யூ பெர்ரி, திருமணம் செய்து கொள்ளவில்லை.