காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
சூது கவ்வும் படத்தின் மூலம் ஒரு அறிமுக இயக்குனராக, தான் மட்டுமல்லாமல் அந்த படத்தில் நடித்த விஜய்சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன் உள்ளிட்ட அனைவருக்குமே தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி. அதைத்தொடர்ந்து விஜய்சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தை இயக்கிய அவருக்கு அந்த படம் பெரிதாக கை கொடுக்கவில்லை. தொடர்ந்து ஒன்றிரண்டு ஆந்தாலாஜி படங்களில் குறும்பட எபிசோட்களை மட்டும் இயக்கினார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தியின் 26-வது படத்தை இயக்கி வருகிறார் நலன் குமாரசாமி. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நலன் குமாரசாமியின் பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி அவரது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளனர் கார்த்தி மற்றும் படக்குழுவினர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. இதுநாள் வரை இப்படி ஒரு கூட்டணியில் படம் தயாராகி வருவதாக சொல்லப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து முதலில் வெளியாகி இருக்கும் புகைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.